இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெருந்தொகை போதைப்பொருள் தொகை நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகையில் இதுவே அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் போதை பொருள் தொடர்பான இலங்கை வரலாறே மாறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளைப்பின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் 294.490 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பபட்டுள்ளது. இதன் பெறுமதி 2945 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருடளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இலங்கையில் போதைப்பொருள் ஆபத்தான பொருளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாரிய போதைப்பொருள் வர்த்தர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவும் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்தொகையான போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டமையானது பொலிஸார் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments: