» » » புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி




புத்தளம் - புழுதிவயல் பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளை, புழுதிவயல் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மேதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் பயணித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......


About

Hi there! I am Admin welcome to my website..Spend less time and get more.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply