மாஸ்டர் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்து கொண்டிருந்தது. அந்தத் தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜய்யின் 66-வது படத்தைத் தானே இயக்கப்போவதாக இயக்குநர் வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரிப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
2007-இல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வம்சி. தமிழில் வெளியான தோழா உள்பட 5 படங்களை அவர் இயக்கியுள்ளார். 2019-இல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments: