பஹ்ரைன் நாட்டில் இருந்து கடந்த 11ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவர் காணாமல் போயுள்ளார்.
அவர் இம்மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வருகைத்தந்துள்ளார்.
எனினும் இதுவரையில் யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனடிலேன், திருநெல்வேலி கிழக்கு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நபர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் விமான நிலைய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தோர் 077 7818755, 077 8029700 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments: